Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு குடிநீர் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு குடிநீர் விநியோகம்

    By போடி,  |   Published on : 27th January 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக, 10 ஆயிரம் பேருக்கு, திங்கள்கிழமை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    போடி நகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர் மு.ஜோதிகுமார், நகர்மன்றத் தலைவர் வி.ஆர்.பழனிராஜ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

    இதன்படி நகராட்சி பொறியாளர் ஆர்.திருமலைவாசன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் வார்டு வாரியாகச் சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர்.

    இதில் முதல் கட்டமாக போடி நகராட்சியில் 33 வார்டுகளிலும் உள்ள சத்துணவு மையங்களில் படிக்கும் குழந்தைகள், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    இப்பணிகளை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தண்டபாணி மற்றும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai