Enable Javscript for better performance
தேனி என்.ஆர்.டி. அரசு மருத்துவமனை மீண்டும் செயல்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    தேனி என்.ஆர்.டி. அரசு மருத்துவமனை மீண்டும் செயல்படுமா?

    By தேனி  |   Published on : 27th January 2015 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனியில் அரசு என்.ஆர்.டி.(என்.ஆர்.தியாகராஜன்)மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தேனியில் தனியார் சார்பில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் உள்ள இடத்தில், அரசு என்.ஆர்.டி. மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கடந்த 2004, டிச.8-இல், தேனி அருகே க.விலக்கில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது.

    முடக்கம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வருகைப் பதிவை அதிகரிக்கும் நோக்கத்தில், கடந்த 2005-ஆம் ஆண்டு, தேனி அரசு என்.ஆர்.டி. மருத்துவமனை முடக்கப்பட்டது. தற்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில், தினசரி 2,000-க்கும் மேற்பட்டோரும், உள்நோயாளிகள் பிரிவில் 600 முதல் 700 பேர் வரை தங்கியிருந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.

    இதனிடையே, பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தேனி அரசு மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு அறையில் காலை நேரம் மட்டும், ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியில் இருந்து புற நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்குகின்றனர். பரிசோதனைக் கூடம், ஊசி போடும் வசதி இல்லை. இதனால், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, அரசு என்.ஆர்.டி.மருத்துவமனை வளாகம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

    தேனி நகர் பகுதியில், நகராட்சி தாய்-சேய் நல மையம் தவிர வேறு அரசு மருத்துவமனைகள் இல்லை. தேனியில் இருந்து, 7 கி.மீ., தூரம் சென்று, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நலன் கருதி, தேனி அரசு என்.ஆர்.டி.மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை முறைப்படுத்தவும், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு மாத மாத்திரைகள் வழங்க மருந்தகம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர்.எம்.ராஜா முத்தையா கூறியது:

    தேனி அரசு என்.ஆர்.டி.மருத்துமனை வளாகத்தில் அலைடு ஹெல்ப் செண்டர் தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மன நலம் குன்றியவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கவும், புற்றுநோய் மற்றும் ரத்த அழுத்த சிகிச்சை பிரிவு தொடங்கவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai