Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் 166 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் 166 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

    By தேனி,  |   Published on : 27th January 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. அரசு சார்பில் 166 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் விழாவுக்கு தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் முன்னிலை வகித்தார். காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக பணியாற்றிய 34 காவலர்களுக்கு முதல்வர் விருதும், மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் 33 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    முன்னாள் படை வீரர் நலத் துறை, விவசாயத் துறை, தோட்டக் கலைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் 166 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.36 லட்சத்து 51 ஆயிரத்து 345 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பள்ளி, கல்லூரி, அரசு விடுதி மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் ஆகியவற்றின் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம் தேசியக் கொடியேற்றி வைத்தார். அரண்மனைப்புதூர் முல்லைநகரில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் காப்பக குழந்தைகளுக்கு உடை மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

    தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராம்ஜீ தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேனி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்றத் தலைவர் எஸ்.முருகேசன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் அம்சகோமதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் ரமேஷ்பாபு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பெரியகுளம் பகுதியில் குடியரசு தின விழா

    பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சியில் ஆணையர் (பொறுப்பு) வி.சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் எம்.செல்லமுத்து கொடியேற்றினார். துணைத் தலைவர் ஆர்.சுப்பிரியா ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் எஸ்.ஜானகி, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆர்.ரமேஷ் ஆகியோர் கொடியேற்றினர்.

    மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் வி.செல்வராஜ் கொடியேற்றினார். தாமரைக்குளம் பேரூராட்சியில் தலைவர் எம்.ராமதண்டபாணி முன்னிலையில் செயல் அலுவலர் (பொறுப்பு) பி.காமாட்சி கொடியேற்றினார். தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் வி.எம்.பாண்டி முன்னிலையில் செயல் அலுவலர் நந்தகுமார் கொடியேற்றினார்.

    ஜெ.ஏ.மகளிர் (தன்னாட்சி) கல்லூரியில் தலைமை சகோதரி மரிய அல்போன்சாள் கொடியேற்றினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர்.அப்துல்ஜப்பார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேன்மொழி ஆகியோர் கொடியேற்றினர். லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஆர்.வைகுண்டம் கொடியேற்றினார்.

    உத்தமபாளையம்: உத்தமபாளையம் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் கேப்டன் முருகன் தலைமை தேசியக் கொடி ஏற்றினார். கோட்டாட்சியர் அலுவகத்தில், கோட்டாட்சியர் பார்த்திபன் கொடி ஏற்றினார். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவகத்தில், டி.எஸ்.பி., கண்ணன் கொடி ஏற்றினார்.

    வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சேகர் கொடி ஏற்றினார். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில், ஆட்சி மன்றக்குழுத்தலைவர் சேக் முகைதீன் கொடி ஏற்றினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai