Enable Javscript for better performance
மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தவே கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தவே கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர்

    By தேனி  |   Published on : 27th January 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராம மக்களுக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவே கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் கூறினார்.

    தேனி ஒன்றியம், அம்பாசமுத்திரம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற, கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று ஆட்சியர் கூறியது: கிராம மக்களுக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக, அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர்கள் தலைமையில், கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

    கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்த கிராம சபைக் கூட்டம் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது.

    அரசுத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்துள்ளதை கிராம சபைக் கூட்டம் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

    கிராம மக்கள் திறந்த வெளிக் கழிப்பிடங்களை தவிர்த்தும், சுற்றுச் சூழலை பாதுகாத்தும், கொசு மற்றும் நோய் கிருமி உற்பத்தியை தடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வைத்து பிரசவம் நடைபெற வேண்டும். அரசுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வடிவேல், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அம்சகோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai