Enable Javscript for better performance
அனுமதியின்றி மதுபானம் விற்றதாக 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனி, ஜன. 27:   தேனி மாவட்டத்தில், திங்கள்கிழமை அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் கடத்திச் சென்றதாகவும், விற்பனை செய்ததாகவும் 4 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

       சிலுக்குவார்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் 50 மதுபான பாட்டில்களை கடத்திச் சென்றதாக அணைக்கரைப்பட்டி, விநாயகர்கோயில் தெருவைச் சேர்ந்த ஆண்டிச்சாமி(40) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

       தேனி அல்லிநகரம், அழகர்சாமி காலனி அருகே அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்றதாக இதே பகுதியைச் சேர்ந்த மச்சேந்திரன்(50) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவரிடமிருந்து 18 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோடாங்கிபட்டியில் அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் வைத்திருந்ததாக இதே ஊரைச் சேர்ந்த கண்ணன்(35) என்வரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 15 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai