Enable Javscript for better performance
சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேனி, ஜன. 27: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜன. 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

      மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்,  எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு,  புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதில் உள்ள சிக்கல், சிலிண்டர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை தெரிவித்து தீர்வு காணலாம், என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai