Enable Javscript for better performance
பெரியகுளம் பகுதியில் கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம், ஜன. 27: குடியரசு தினத்தை முன்னிட்டு பெரியகுளம் பகுதியில் கிராமசபைக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

     கீழவடகரை ஊராட்சியில் தலைவர் பி.டி.லட்சுமி தங்கப்பாண்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத்தலைவர் பி.தேவி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சிச்செயலர் எஸ்.கணபதி, மகளிர் சுயஉதவிóக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஜல்லிபட்டி ஊராட்சியில் தலைவர் ஏ.பெரியராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத்தலைவர் எம்.தவமணி மற்றும் மன்ற உறுப்பினர்கள், ஊராட்சிச்செயலர் எம்.கோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    எண்டப்புளி ஊராட்சியில் தலைவர் ஏ.செல்வி அன்னப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். துணைத்தலைவர் தங்கப்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சிச்செயலர் ஜெயப்பாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டங்களில், ஊராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது, சீமைக்கருவேல் மரங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai