Enable Javscript for better performance
போடியில் 1 மாணவி, 2 மாணவர்கள் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    போடி, ஜன. 27: போடி பகுதியில் பள்ளி மாணவி மற்றும் 2 மாணவர்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

       போடி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மணி. இவரது 15 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜனவரி 24-ஆம் தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து எஸ்ஐ பிச்சைமணி வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றார்.  

      போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சுகுமார் (15). தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு, ஜனவரி 19-ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பள்ளிக்கு செல்லவில்லை.

       போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் மகன் தர்மதுரை (12). போடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் போடி புறநகர் எஸ்ஐ இத்ரிஸ்கான் வழக்குப்பதிவு செய்து மாணவர்களைத் தேடி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai