Enable Javscript for better performance
போடி ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    போடி, ஜன. 27: போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டி, அணைக்கரைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகள், போடிநாயக்கனூர் நகராட்சி பகுதிகள் மற்றும் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வில், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொடக்கப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மாணவ, மாணவியர்களுக்கு கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டுமானப் பணி, சாலை சீரமைப்புப் பணி உள்ளிட்ட ரூ.24.35 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

     அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் சாலைப்பணிகள் மற்றும் தடுப்பணையினையும் ஆய்வு செய்தார்.

      போடிநாயக்கனூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை, நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளையும், ஆய்வு செய்த ஆட்சியர், அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தமாக பராமரித்திடவும், தண்ணீர் தேங்கா வண்ணம் பாதுகாத்திடவும், நகராட்சி ஆணையாளர், பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

         ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வீராச்சாமி, காந்திராஜ், போடிநாயக்கனூர் நகராட்சி தலைவர் பழனிராஜ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமலைவாசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)  டாக்டர் காஞ்சனா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் சபீதா, செயல் அலுவலர் சுதர்ஷன்  உள்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai