Enable Javscript for better performance
விவசாயி மீது தாக்குதல் தந்தை, மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனி அருகே செவ்வாய்க்கிழமை சந்தைக்கு காய்கறி விற்கச் சென்ற விவசாயியை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

     தேனி அருகிலுள்ள வயல்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த முத்தையாத் தேவர் மகன் முத்து(52). இவர், தனது தோட்டத்தில் விளைந்த காலிப்பிளவரை விற்பனை செய்வதற்கு தேனி சந்தைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். வயல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, இதே ஊரைச் சேர்ந்த மதுரையில் உள்ள காய்கறி கமிஷன் கடை ஏஜென்ட் மணிகண்டன்(31), அவரது தந்தை முத்தையா(67), தாயார் அங்கம்மாள்(61) ஆகியோர் முத்துவை வழிமறித்தனர். தேனி சந்தைக்கு காலிப்பிளவர் அனுப்பியது குறித்து கேட்டு மூவரும் சுற்றிவளைத்து தாக்கினராம். இதில், காயமடைந்த முத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

     இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து மணிகண்டன், முத்தையா ஆகியோரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai