Enable Javscript for better performance
வைகை அணையின் நீர் மட்டம் சரிவு: பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    வைகை அணையின் நீர் மட்டம் சரிவு: பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    By ஆண்டிபட்டி  |   Published on : 28th January 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி, ஜன. 27: மழைப்பொழிவு இல்லாத நிலையில், வைகை அணையின் நீர் மட்டம் சரிந்து வருவதால், பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

     திண்டுக்கல்,மதுரை மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களின் ஒருபோக மற்றும் இருபோக பாசனத்திற்காக, பெரியாறு மற்றும் திருமங்கல பிரதான கால்வாய்களில், ஜன. 21-ஆம் தேதி முதல் விநாடிக்கு 1,200 முதல் 1,400 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத்தண்ணீரைக் கொண்டு திண்டுக்கல்,மதுரை மாவட்டப்பகுதிகளைச்  சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

    பெரியாறு மற்றும் வைகை அணைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பெரியாறில் திறக்கப்பட்டுள்ள சிறிதளவு தண்ணீர் மட்டுமே தற்போது வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 386 அடி தண்ணீர் வரத்து இருப்பதால், செவ்வாய்க்கிழமை வைகை அணையின் நீர்மட்டம் 38 அடிக்கு கீழே சரிய தொடங்கியது.

      இதைத் தொடர்ந்து, எதிர்வரும் கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு,  பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், மதுரை மற்றும் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு தினமும் விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai