ஒட்டன்சத்திரம் அருகே கார் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
Published on
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

 அம்பிளிக்கையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (34). இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி தேதி காலை காரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றுவிட்டாராம்.

  அதன் பின்னர் மார்ச் 5 ஆம் தேதி திரும்பி வந்து பார்க்கும் போது காரைக் காணவில்லை.  இது குறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com