ஒட்டன்சத்திரம் அருகே பைக்கும், லாரியும் மோதிய விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த இன்னாசி ராஜா மகன் அந்தோணி விஜய் (20). இவர், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர், புதன்கிழமை இரவு பைக்கில் தனது நண்பரான கணேசன் என்பவருடன் திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரெட்டியார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே செல்லும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு வியாழக்கிழமை அந்தோணி விஜய் உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான திருமூர்த்தியை கைது செய்தனர்.