Enable Javscript for better performance
தேனி மாவட்ட தேசிய தொண்டர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்ட தேசிய தொண்டர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

    By போடி  |   Published on : 15th April 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தேசிய தொண்டர் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை, போடி சதாசிவம் தொடங்கி சமீபத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே, தேனி மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து அவர் பெயர் வெளியிட்டுள்ளார்.

      தேனி மாவட்டச் செயலராக டாக்டர் என். காமாட்சி சுந்தரேஸ்வரன், பெரியகுளம் நகரச் செயலர் எம். ராஜாராம். பெரியகுளம் ஒன்றியச் செயலர் ஏ.எஸ். தனராஜ், தேனி நகரச் செயலர் தேனி ஆர். பார்த்திபன், தேனி ஒன்றியச் செயலர் ஆர். திருநாவுக்கரசு, போடி நகரச் செயலர் டி. ராஜா, போடி ஒன்றியச் செயலர் டி. சேகர், கம்பம் ஒன்றியச் செயலர் எஸ். முருகானந்தம், ஆண்டிபட்டி நகரச் செயலர் எம். கணேசமூர்த்தி.  அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய தொண்டர் காங்கிரஸ் கட்சி அதிமுகவை ஆதரிக்கும் என்றும், இதற்காக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai