Enable Javscript for better performance
மாவூற்று வேலப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மாவூற்று வேலப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழா

    By ஆண்டிபட்டி  |   Published on : 15th April 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் சித்திரைத்  திருவிழாவை முன்னிட்டு, வியாழக் கிழமை ஆயிரக்கணக்காண பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்தனர்.

       இக்கோயில் மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் வள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்தபோது, வேலுடன் கூடிய முருகன் சிலை கிடைத்ததாம்.

     இந்த சிலையை  மாமரத்தின் ஊற்றுக்கு அடியில் வைத்து வழிபட்டு வருவதால், இக்கோயிலுக்கு மாவூற்று வேலப்பர் என பெயர் ஏற்பட்டது.    சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை இக்கோயிலின் எதிரே உள்ள கருப்பசாமி கோயிலில் கால் கட்டு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

       இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர்.    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர். இதற்காக, தேனி, உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai