Enable Javscript for better performance
3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை: வேலை உறுதித் திட்ட பயனாளிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை: வேலை உறுதித் திட்ட பயனாளிகள் அவதி

    By DIN  |   Published on : 26th December 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேல் சம்பளம் வழங்காததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
     மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
      ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கடந்த ஜூலை 13- ஆம் தேதியில் இருந்து தற்போது வரை பயனாளிகளுக்கு சம்பளம் வழங்கவில்லை. க.மயிலை ஒன்றியத்தில் கடந்த ஆக.31-ஆம் தேதியில் இருந்தும், பெரியகுளம் ஒன்றியத்தில் செப்.21-ஆம் தேதியில் இருந்தும், தேனி ஒன்றியத்தில் ஆக.17-ஆம் தேதியில் இருந்தும், போடி ஒன்றியத்தில் ஆக.28-ஆம் தேதியில் இருந்தும், கம்பம் ஒன்றியத்தில் செப்.28-ஆம் தேதியில் இருந்தும் தற்போது வரை பயனாளிகளுக்கு சம்பளம் வழங்கவில்லை.
      மழையின்றி விவசாயப் பணிகள் முடங்கியுள்ளதால், வேலை உறுதியளிப்புத் திட்ட தினச் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ள தங்களுக்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேல் சம்பளம் வழங்கப்படாததால் சிரமத்தில் உள்ளதாக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகள் தெரிவித்தனர்.
      இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மத்திய அரசு மூலம் நிதி விடுவிக்கப்பட்டதும் பயனாளிகளுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்பட்டு விடும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai