Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

    By உத்தமபாளையம்  |   Published on : 21st May 2016 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் இருந்து, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் உத்தமபாளையம் காவல் சார்பு ஆய்வாளர் பிச்சைமணி உள்ளிட்ட போலீஸார் க.புதுப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்ற போது அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமார் (26), மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் தப்பி ஓடிய குமார் மீது சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai