Enable Javscript for better performance
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி வகுப்பு

    By தேனி  |   Published on : 21st May 2016 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 சிறப்பு பொதுத் துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 8 இடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

      இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறியதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒன்று முதல் 3 பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 3ஆவது வாரத்தில் சிறப்பு பொது துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி அளிக்க மாவட்டத்தில் 8 இடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

     தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம் வி.நி. அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, சின்னமனூர் கே.வி.ஏ. மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai