Enable Javscript for better performance
உத்தமபாளையம்: பாசனக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உத்தமபாளையம்: பாசனக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இங்குள்ள சாக்கடை கால்வாய்கள் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. தற்போது அதில் 80 சதவீத கால்வாய்கள் உடைந்து சேதமாகி விட்டன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கிக் கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பி.டி.ஆர். காலனி, இந்திரா காலனி, தென்றல் நகர், தென்னகர் காலனி, காயிதே மில்லத் நகர், தாமஸ் காலனி, ஆர்.சி. தெரு உள்ளிட்ட 1 முதல் 10 வார்டுகளிலுள்ள சாக்கடை கழிவுநீர் அங்குள்ள உத்தமுத்து கால்வாயிலும், 11 முதல் 18 வரையிலுள்ள வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப் பெரியாற்றிலும் கலக்கின்றன. இதனால் விவசாய விளைநிலங்கள் பாதிப்பதோடு, பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே பேரூராட்சி நிர்வாகம், குடியிருப்பு பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் அமைத்தும், பாசன கால்வாய் மற்றும் ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai