Enable Javscript for better performance
கணினி வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கணினி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (40), இவர் உத்தமபாளையத்தை சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் தேனியைச் சேர்ந்த பழனிச்சாமி (40) ஆகியோரிடம் தலா ரூ. 30,000 மற்றும் ரூ.5,000 பெற்றுக் கொண்டு குறைந்த விலையில் கணினி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி வந்தாராம். இதனையடுத்து, இருவரும் தனித்தனியாக க.விலக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai