Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்றத்துக்குள்பட்ட பகுதியில் சத்யா நகர் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேல் குடிநீர் வழங்க வில்லை என கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இந்நிலையில் ஆண்டிபட்டி- வைகை அணை சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த ஆண்டிபட்டி காவல் சார்பு- ஆய்வாளர் பாண்டியம்மாள், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai