Enable Javscript for better performance
தேனியில் அக். 9-இல் தேசிய அஞ்சல் வார விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் அக். 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா நடைபெறுகிறது.
    இதுகுறித்து வெள்ளிக்கிழமை தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறியது: அஞ்சல் வார விழாவையொட்டி அக். 10-ஆம் தேதி தேனி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டமும், பள்ளிகளில் அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாமும் நடைபெறும்.
    அக். 13-ஆம் தேதி பள்ளிக் குழந்தைகள் அஞ்சலகங்களுக்கு அழைத்து வரப்பட்டு, அஞ்சல் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். முத்துத்தேவன்பட்டியில் உள்ள சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளியில் அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறும்.
    அக். 14, 15 ஆகிய தேதிகளில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு தினம் மற்றும் வணிக வளர்ச்சி தின நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai