Enable Javscript for better performance
தேனியில் மக்கள் நலக் கூட்டணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் வெள்ளிக்கிழமை மக்கள் நலக் கூட்டணி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலருமான டி.வெங்கடேசன் தலைமை வகித்தார்.
    மதிமுக மாவட்ட துணைச் செயலர் எஸ்.பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பி.தங்கம், மாநிலக் குழு உறுப்பினர் திருமலைக்கொழுந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம், தொகுதிச் செயலர் ரா.தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    காவிரியில் போதிய தண்ணீர் திறக்க கர்நாடகா அரசை வலியுறுத்தியும், காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசை வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி
    மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai