Enable Javscript for better performance
பள்ளியில் வன உயிரின வார விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் சிவானந்தம் தலைமை வகித்தார். தேனி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் பி.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பள்ளியில் நடைபெற்ற ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை அவர் வழங்கினார். மரக்கன்றுகள் வளர்த்தல் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய விழுதுகள் இளைஞர் மன்ற சிறுவர்களுக்கு வனத்துறை சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
    இந்நிகழ்ச்சியில் தேனி வனச்சரகர் ஆர்.மகேந்திரன், உத்தமபாளையம் வனச்சரகர் டி.சுரேஷ்குமார் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் மணிகண்டன், ஸ்ரீனிவாசன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வனத்துறையினர் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai