Enable Javscript for better performance
பெரியகுளத்தில் ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளத்தில் வியாழக்கிழமை ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    பெரியகுளம், தென்கரை போலீஸார் வியாழக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் சென்ற 5 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களது காரை சோதனையிட்ட போது, அதில் உருட்டுகட்டை மற்றும் இரும்புத்தடி மற்றும் நைலான் கயிறு இருந்தது. விசாரணையில் மதுரையைச் சேர்ந்த செல்வம் (32), முத்துக்குமார் (34) கணேசன் (40) பரமசிவம் (38) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த ராமஜெயம் (32) என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஒவ்வொரு பகுதியாக நோட்டமிட்டு ஆள்கள் இல்லாத வீட்டில் திருட்டில் ஈடுபடுவதாக கூறினார்களாம். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai