Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 9-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாற்றுத் திறனாளிகள் அரசு உதவித் தொகை பெற அக். 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 9-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும், 40 சதவிகிதத்துக்கும் மேல் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மேல்படிப்பு படிக்க மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.46 ஆயிரம் வரையும், 11-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையும், பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
    எனவே மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித் தொகை பெற தங்களது தேசிய அடையாள அட்டை, வருவாய் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனம் மூலம்  இணையதள முகவரியில் அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலினை பெற்றோர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சமப்ர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai