Enable Javscript for better performance
வேலை வாய்ப்பற்றோர் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வேலை வாய்ப்பற்றோர் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து 30.9.2016 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்கு காத்திருப்போர் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து, வேலை வாய்ப்புக்கு 5 ஆண்டுக்கும் மேல் காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்குகிறது. வேலை வாய்ப்பு பதிவுதார்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை, எஸ்.எஸ்.எல்.சி. தோல்வியடைந்தவர்களுக்கு ரூ.300, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.900 வீதம் 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத் திறானாளிகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத் திறனாளி பதிவுதார்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு ரூ.1,800, மேல்நிலை கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250, பட்டதாரிகளுக்கு ரூ.3,000 வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து 30.9.2016 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உரிய படிவம் பெற்று உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai