பெரியகுளம் பிஎஸ்டி நினைவு அரங்கத்தில் தேனி மாவட்ட கூடைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து கூடைப்பந்து கழகத்தின் தேனி மாவட்டத் தலைவர் பி.சி.சிதம்பர சூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் 16 வயதுக்குள்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி ஜூன் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி முடிய கோவையில் நடைபெறுகிறது.
இதில் பங்குபெறும் தேனி மாவட்ட ஆண்கள் அணிக்கான தேர்வு சனிக்கிழமை (ஜூன் 10) காலை 7 மணிக்கு பெரியகுளம், தென்கரை, பிஎஸ்டி நினைவு அரங்கத்தில் நடைபெறுகிறது. எனவே 1.1.2001-க்குப் பிறகு பிறந்த வீரர்கள் இத்தேர்வில் வயது மற்றும் வசிப்பிட சான்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.