சின்னமனூர் அருகே ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை மற்றும் மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (56). இவரது மனைவி நல்லம்மாள் குடும்ப பிரச்னை காரணமாக உறவினர் ரமேஷ் வீட்டில் சென்றாராம்.
இந்நிலையில் நடராஜன், தனது மகன் ஹரிகரனுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார்.
அப்போது ரமேஷூடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது நடராஜனும், ஹரிகரனும் சேர்ந்து இரும்புக் கம்பியால் ரமேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து தந்தை மற்றும் மகனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.