தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளி மற்றும் விடுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு மதுரை, அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள செனாய்நகர், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் பொதுப் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.
ஜூன் 9-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான பொதுப் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழாசிரியர், இடை நிலை ஆசிரியர், இடைநிலை விடுதி காப்பாளர் பணியிட மாறுதல், பட்டதாரி ஆசிரியர், விடுதிக் காப்பாளர், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். முன்னுரிமை உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் ஜூன் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மதுரை கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.