தேனி மாவட்டம் மேகமலையில் புதன்கிழமை மின்னல் தாக்கியதில் பெண் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
மேகமலை மலைக்கிராமத்திலுள்ள வெண்ணியார் தேயிலை தோட்ட எஸ்டேட்டை சேர்ந்தவர் வினோத்குமார், அவரது மனைவி இசக்கியம்மாள் (27). இவர் அங்குள்ள தோயிலை தோட்டத்தில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தார். புதன்கிழமை மாலையில் வேலைக்கு சென்று திரும்பியவர் வீட்டிற்கு முன் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இச்சமயத்தில் மின்னல் தாக்கி இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.