பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் சர்வதேச புள்ளியில் துறை சார்பில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தி.நிர்மலா தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினார். துணை முதல்வர் ஆரோக்கியம் ததேயுஸ் வரவேற்றார். செயலர் பி.ஜே.குயின்ஸிலி ஜெயந்தி வாழ்த்திப் பேசி, பயிற்சிப் பட்டறை கையேட்டினை வெளியிட்டார். அதனை ஏ.ஐ.எம்.எஸ்.டி. மலேசியா பல்கலைக்கழக பேராசிரியர் கே.மாரிமுத்து பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இணைப் பேராசிரியை வே.சாந்தி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் சகாயராணி, டெல்பின்ரோஸ் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.