மஞ்சளாறு அணையில் மூழ்கி புதன்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் மகன் பிரவீன்குமார் (23). இவர் தனது நண்பர்களுடன் புதன்கிழமை காலை மஞ்சளாறு அணைக்கு குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதியில் குளித்த போது அவர் நீரில் மூழ்கினார்.
அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் அவரை சடலமாக மீட்டனர். தேவதானப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.