Enable Javscript for better performance
கட்டடம் இடிந்து உயிரிழந்த போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    கட்டடம் இடிந்து உயிரிழந்த போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அஞ்சலி

    By DIN  |   Published on : 22nd October 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், பொறையாரில் போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு, தேனி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் முன்பாக சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
          பழனிசெட்டிபட்டி, பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம், லோயர்-கேம்ப் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் முன் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொறையாறில் பணிமனைகட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த 8 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
        அப்போது, இடியும் நிலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். பணிமனை கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai