Enable Javscript for better performance
சொக்கனாலைப் பகுதியில் வருவாய்த் துறையினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே சொக்கனாலைப் பகுதியில் வருவாய்த் துறையினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

    சொக்கனாலைப் பகுதியில் 20 மலைவாழ் குடும்பங்களும், பட்டூர் பகுதியில் 6 மலைவாழ் குடும்பங்களும் வசித்து வருகின்றன. இவர்கள் தாங்கள் விவசாயம் செய்வதற்கு நிலம் வழங்கவேண்டும் என அரசுக்கு மனு அளித்திருந்தனர். அதையடுத்து, அகமலை கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் தலைமையில், வருவாய்த் துறையினர் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்து, மலைவாழ் மக்களுக்கு நிலம் வழங்குவது குறித்து பார்வையிட்டனர். மேலும், மலைவாழ் மக்களின் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சேகரித்தனர்.
     மலைவாழ் மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு மலைப் பகுதியில் நிலம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai