Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில்  அக்.24-இல் வாக்காளர் பட்டியல் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில்  அக்.24-இல் வாக்காளர் பட்டியல் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 22nd October 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அக்டோபர் 24-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
    தேர்தல் ஆணையம் சார்பில், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்டத் தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகள் மற்றும் ஆன்-லைன் மூலமும் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்ய உள்ளார்.
    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிகளுடன் வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai