காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, புதன்கிழமை முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணைவேந்தர் சு. நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை, எம்.ஃபில், பிஎச்.டி மற்றும் பட்டயம், பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் "ஏ' தகுதியும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய நிறுவன ரேங்கிங் கட்டமைப்பில் 79ஆவது இடத்தையும் பெற்றுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.ruraluniv.ac.in என்ற பல்கலை.யின் இணையதள முகவரியில் இடம் பெற்றுள்ளது. மேலும், அதே முகவரியில் பாடப் பிரிவுகள், கல்வித் தகுதி, கட்டணம் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு

4-ஆம் காலாண்டு: நஷ்டத்தில் ஸ்விகி, அா்பன் கம்பெனி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
