பெரியகுளம் அருகே இளைஞரை தாக்கிய இருவரை தென்கரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தாமரைக்குளம், வ.உ.சி. சிலை அருகே நாகராஜ் (23) என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேங்கையன் (28), ஆல்வின் பிரசாத் (26), மனோஜ்குமார் (27) ஆகியோர் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து, நாகராஜை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகராஜ் வீட்டுக்கு சென்று அவரது வீட்டின் கதவு மற்றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினராம். பின்னர், நாகராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தென்கரை காவல் நிலையத்தில் நாகராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, வேங்கையன், மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.