கடமலைக்குண்டு அருகே கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமானை திங்கள்கிழமை வனத்துறையினர் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமானை திங்கள்கிழமை வனத்துறையினர் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கடமலைக்குண்டு அருகே டானா தோட்டப் பகுதிக்கு திங்கள்கிழமை காலை தண்ணீர் தேடி வந்த கடமான் அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அந்த கடமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.
இதனிடையே  டானா தோட்டப் பகுதியில் தண்ணீர் தேடி மான்கள் வரும் போது அவை அடிக்கடி வாகனங்கள் மோதி உயிரிழக்க நேரிடுகிறது.  எனவே அப்பகுதியில் விலங்குகளுக்கு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com