தேனி மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

தேனி மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் சனிக்கிழமை (டிச.8)  5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் சனிக்கிழமை (டிச.8)  5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி வட்டாரம் தர்மபுரி, ஆண்டிபட்டி வட்டாரம் சிறப்பாறை, போடி வட்டாரம் பெருமாள்கவுண்டன்பட்டி, பெரியகுளம் வட்டாரம் குள்ளப்புரம், உத்தமபாளையம் வட்டாரம் பொட்டிப்புரம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு, பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
 இம் முகாம்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள் மற்றும் தொண்டு நிறுனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் முகவரி மாற்றம், கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com