Enable Javscript for better performance
சுருளிப்பட்டி ஊராட்சியில் புளிய மரங்கள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சுருளிப்பட்டி ஊராட்சியில் புளிய மரங்கள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வியாழக்கிழமை 3 ஆவது முறையாக புளிய மரங்கள் ஏலம்  ஒத்திவைக்கப்பட்டது. 
     தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உள்ள 114 புளியமரங்களின் பலன்களை அனுபவித்துக்கொள்ள வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலக அரங்கில் ஏலம் நடைபெற்றது. கம்பம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கம் உள்ளிட்ட 15 -க்கும் மேலான ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது 20-க்கும் மேலான ஆண்கள், பெண்கள் ஊராட்சி அலுவலகத்திற்குள் சென்றனர். 
    அதிகாரிகளிடம், வாய்க்கால், ஆறு, வண்டிப்பாதை உள்ளிட்ட பல ஆக்கிரமிப்பு இடங்களில் மரங்கள் உள்ளன. அவற்றை ஏலம் விடாமல், குறிப்பிட்ட மரங்களை மட்டும் ஏன் ஏலம் விடவேண்டும், ஏலம் விட்டால் அனைத்தையும் ஏலம் விடுங்கள் என்று ஏலம் நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஏலம் எடுக்க வந்தவர்கள் கடந்த இரண்டு முறை ஏலம் நடைபெறவில்லை, இந்த முறை ஏலம் விடவேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தவே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் அதிகரித்து, கூச்சல் குழப்பநிலை நிலவியது. இறுதியாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் புளிய மரங்களின் ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். தேதியை குறிப்பிட்டு ஒத்திவையுங்கள் என்று ஏலதாரர்கள் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ராயப்பன்பட்டி போலீஸார் வந்து ஏலதாரர்கள், பொதுமக்கள் கொண்ட கூட்டத்தை கலைந்து போகும்படி செய்தனர். மூன்றாவது முறையாக ஏலம் ஒத்தி வைத்தது பற்றி துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட கூச்சல், குழப்பம் பற்றி கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவிக்க, தொடர்பு கொண்டோம், ஆனால் அவர்கள் செல்லிடப்பேசிகளை எடுக்கவே இல்லை, எனவே ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளோம், என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai