Enable Javscript for better performance
தண்ணீர் வரத்து குறைவால் வெறிச்சோடியது சுருளி அருவி- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 
     தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முதன்மையான இடத்தை வகிப்பது சுருளி அருவி. அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், சுருளி ஆண்டவர் கோயில், கைலாசநாதர் குகை கோயில்களில் வழிபாடுகள் செய்வதற்கும், நேர்ச்சை கடன்களை செலுத்துவதற்கும், முன்னோர்களுக்கு திதிகள் கொடுப்பதற்கும் பலரும் வருவதால், ஆண்டு முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். 
     வியாழக்கிழமை நிலவரப்படி சுருளி அருவியில் நீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. தண்ணீர் குறைவால், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது, வழக்கம் போல் நேர்ச்சை கடன்கள் செய்ய வரும் பொதுமக்கள் மட்டும் வருகை தந்து காரியங்களை செய்தனர். அருவியில் தண்ணீர் குறைந்து வருவதை ஏமாற்றத்துடன் பார்த்து விட்டு, கீழே வந்து, மேகமலை வன உயிரின சரணாலயத்தினர் அமைத்திருக்கும் ஷவர் குழாயில் குளித்து விட்டு கோயில்களுக்கு சென்றனர். கூட்டம் குறைவால் அருவி உள்ள வனப்பகுதி வெறிச்சோடியது. இது பற்றி வனத்துறை ஊழியர் ஒருவர் கூறும் போது, வருடத்தில் மூன்று மாதங்கள் அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படும், ஆண்டுத்தேர்வுகள் நெருங்குவதால் சுற்றுலா பயணிகள் வருகை இருக்காது, பக்தர்கள் வருகை மட்டுமே இருக்கும் என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai