Enable Javscript for better performance
தருமத்துப்பட்டி கண் சிகிச்சை முகாம்: வெளிநாட்டினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தருமத்துப்பட்டி கண் சிகிச்சை முகாம்: வெளிநாட்டினர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி தர்மத்துப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை 37 பேர் கொண்ட வெளிநாட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
         ஏ.எச்.எம். அறக்கட்டளை, சக்தி பெண்கள் கூட்டமைப்பு, நேசக்கரங்கள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மற்றும் நலக் கூட்டமைப்பு, தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை தர்மத்துப்பட்டி அறக்கட்டளை வளாகத்தில் நடத்தின. இம்முகாமில்  கென்யா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மியான்மர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவமனைகளை நிர்வகிக்கும் 37 பேர் பங்கேற்று ஆய்வு செய்தனர். இதுபோல் தங்கள் நாடுகளில் ஏழை மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும், தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து முகாம்கள் நடத்த உள்ளதாகவும் அதற்காக முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் வெளிநாட்டினர் தெரிவித்தனர்.  முகாமில் 152 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இவர்களில் 30 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai