Enable Javscript for better performance
தேக்கடியில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேக்கடி வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய கூடலூரைச் சேர்ந்த 2 பேரை கேரள வனத்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். 
     கேரள மாநிலம் குமுளி அருகே தேக்கடி வனப் பகுதி உள்ளது. பெரியார் புலிகள் வனச் சரணாலயமான இந்த பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களையும், மரங்களை வெட்டிக் கடத்துபவர்களையும் பிடிக்க தனிப்படையை கேரள வனத்துறையினர் அமைத்துள்ளனர். 
     இந்நிலையில், வியாழக்கிழமை குமுளியிலிருந்து, தமிழக எல்லை நோக்கி 3 பேர் மூட்டையுடன் சென்றனர். அப்போது, வனத்துறையால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய் ஜூலி இருவரையும் மோப்பம் பிடித்து மடக்கியது. சந்தேகப்பட்ட வனத்துறையினர் சாக்கு மூட்டையை சோதித்தபோது, அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 25 கிலோ சந்தனக் கட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த இருவரும் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சடையாண்டி(38), பாண்டியன்(35) ஆகியோர் என்று தெரிய வந்தது. வனத்துறையினர் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai