Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் மழை: நெல் அறுவடை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
     மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவில் கூடுதல் பனிப் பொழிவும், பகலில் கடும் வெயிலும் இருந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், பனிப்பொழிவு மற்றும் வெயில் குறைந்து குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவி வருகிறது.
    வைகை அணை நீர்பிடிப்பில் அதிக அளவில் 65.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ஆண்டிபட்டியில் 44 மி.மீ., அரண்மனைப்புதூரில் 35.2 மி.மீ., வீரபாண்டியில் 2, போடியில் 7.4, சோத்துப்பாறையில் 15, மஞ்சளாறு அணை நீர்பிடிப்பில் 59, உத்தமபாளையத்தில் 4, கூடலூரில் 5.6, தேக்கடியில் 3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.    மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், திடீர் மழையால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்பட்டு களத்தில் உள்ள நெல்லில் மழையால் ஈரப்பதம் அதிகமாகி போதிய விலை கிடைக்காது என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai