Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் லாட்டரி விற்பனையைத் தடுக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் லாட்டரி விற்பனையைத் தடுக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, வண்டிப் பெரியாறு, கட்டப்பணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
     இவர்களில் சிலர் சட்டத்திற்கு விரோதமாக அங்கிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து உத்தமபாளையம் கிராமச்சாவடி, அம்மாபட்டி விலக்கு, பேருந்து நிலையம், கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் விற்கின்றனர். அதே போல , சின்னமனூர், கம்பம், கூடலூர், ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி, கோம்பை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  விற்கப்படுகிறது. இவற்றை வாங்கும் எழை எளிய நடுத்தர மக்கள், தினக் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்த  வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இணைய தளம் மூலமாக நடைபெறும் கேரள மாநில லாட்டரி குலுக்கலில் பரிசு கிடைத்த ஒருசிலர் சம்பந்தப்பட்ட ஏஜென்டுகள் மூலம் பணத்தை பெற்று வருகின்றனர். இந்த லாட்டரி சீட்டுகளில் போலி லாட்டரிகளும் விற்பனையாவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர்கள் தற்போது தேனி மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள கேரள லாட்டரி  சீட்டு விற்பனையை  தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai