Enable Javscript for better performance
பெரியகுளம், ஆண்டிபட்டியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம், ஆண்டிபட்டியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 09th February 2018 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
     தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை இல்லை. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர். மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை மாலை வருசநாடு, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai