Enable Javscript for better performance
பொள்ளாச்சி அருகே ஆம்னி வேனில் தீ- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது.
       தேனியைச் சேர்ந்தவர்கள் பெத்தன்னன் (35), கணேஷ்ராஜ் (45).  இவர்கள், வேனில் ஊர் ஊராகச் சென்று சாலையோரத்தில் துணி வியாபாரம் செய்துவந்துள்ளனர். இந்நிலையில்,  தேனியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்துக்கு துணி வியாபாரத்துக்காக வியாழக்கிழமை சென்றுள்ளனர். 
      காலை 9.30 மணியளவில் பூசாரிபட்டி அருகே வந்தபோது ஆம்னி வேனின் முன்பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து உடனடியாக வேனில் இருந்த இருவரும் கீழே இறங்கினர். தீ வேன் முழுவதும் பரவியது.  தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்ததுடன்,  ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள துணிகளும் எரிந்து சேதமாயின.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai