Enable Javscript for better performance
வரி உயர்வைக் கண்டித்து கூடலூர் நகராட்சி முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கூடலூர்  பகுதிகளில் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் உயர்த்தப் பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். 
      நகர செயலாளர் ஜெயராஜ் தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அப்போது நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளியே வந்தார்.
       அவரை முற்றுகையிட்டு சொத்துவரி உயர்வை ரத்து செய்யுமாறு கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் தனித் தனியாகக் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையாளர், தற்சமயம் வரி உயர்வு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் இருக்கலாம் என்றார். பின்னர் கட்சியினர் கலைந்து சென்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai