சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே தொட்டியில் நீர் அருந்திய 3 பசு மாடுகள் உயிரிழந்ததாக, புதன்கிழமை இரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கதிரியநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர், தனது வீட்டுக் கொட்டத்தில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் இவரது வீட்டுக்குப் பின்புறமுள்ள தண்ணீர் தொட்டியிலிருந்த தீவன ஊறல் நீரை, 3 பசுமாடுகள் குடித்துள்ளன. சிறிது நேரம் கழித்து, 3 பசு மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
    அதையடுத்து, தண்ணீர் தொட்டியில் யாரோ விஷம் கலந்து விட்டதாலேயே தனது பசு மாடுகள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வேல்முருகன் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai